உள்ளூர் செய்திகள்

சி.ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா

Published On 2023-01-21 08:22 GMT   |   Update On 2023-01-21 08:22 GMT
  • பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் தெள்ளார், ஊராட்சி ஒன்றியம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வாசிப்பு இயக்க திட்டம் தொடக்க விழா, மற்றும் புதிய நூலக திறப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்சிநர் தமிழ் நேசன், குருவள மைய தலைமை ஆசிரியர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தெள்ளார், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன், கலந்து கொண்டு. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 22-23-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, தெரியாத, அனைவருக்கும் எழுத்தும், எண்ணறிதல், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விழிப்புணர்வு துண்டு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பச்சையப்பன், சரவணன், பள்ளி மேலாண்மை கல்வியாளர் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிரிஜா, கணினி ஆசிரியர் சுரேஷ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர் இந்துமதி, வாசிப்புத்திறன் இயக்க பொறுப்பாளர் விஜய் லட்சுமி, வந்தவாசி கிருஷ்ண கோச்சிங் சென்டர் சீனிவாசன், மற்றும் ஊர் பெரியவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News