உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

Published On 2022-12-27 09:16 GMT   |   Update On 2022-12-27 09:16 GMT
  • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
  • அரசு தரப்பில் உதவிகள் வழங்கப்படவில்லை என புகார்

திருவண்ணாமலை:

கலசப்பாக்கத் தில் தொடரும் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் சேதமடைந் துள்ளன. கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சா புரம் ஆகிய ஒன்றிய பகு திகளில் கடந்த ஆடி மாதம் சம்பா பயிரான பொன்னி விதைக்கப்பட்டது.

நெல் விதைத்து நடவு செய்து 6 மாதத்துக்குப் பின் தற்போது அறுவடை செய்யும் நிலையில் பயிர் தயாரானது. பல இடங்க ளில் பயிர் அறுவடை முடிந்த நிலையில் மழை தொடர்ந்துவருகிறது.

அறுவடை செய்வதற்கு ஏந்திரங்களும், தொழிலாளர்களும் கிடைக்காத நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் விடப்பட்டுள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கலசப்பாக்கம் பகுதியில் எந்த தொழிற்சாலையும் கிடையாது. இதனால் வெளி மாநிலங்களில் சென்று தான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கொரோனா தாக்குதலினால் கடந்த 2 ஆண்டுகள் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். ஆறுதலாக சம்பா பருவம் கைகொடுக்கும் என நம்பினோம். தற்போது நெல்கொள்மு தல் விலையும் சற்று அதி கரித்துள்ளது. இந்நிலை யில் அறு வடைக்காலத்தில் மழைபெய்தால் பயிர்கள் நீரில் மூழ்கின.

கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனைக்குள்ளா கியுள்ளனர்.

தற்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் மழை பாதிப்புக்குள்ளான நெற் பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News