உள்ளூர் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
- சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ள வேணுகோபால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டன. பின்பு சாமிக்கு வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மகா தீபார தனை செய்யப்பட்டது.