உள்ளூர் செய்திகள்

உளுந்து பயிரிடப்பட்ட பண்ணையை அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-07-21 09:09 GMT   |   Update On 2022-07-21 09:09 GMT
  • விதைச்சான்று பணிகள் தீவிரம்
  • கலப்பு இல்லாமல் சுத்தமாக இருக்க அறிவுறுத்தல்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் விதைச்சான்று பணிகளை சென்னை விதைச்சான்று இயக்குனர் கோ வளர்மதி வயல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆரணி பகுதியில் நடப்பு காரிப் பருவத்தில் நெல் (20 ஏக்கர்), உளுந்து (32 ஏக்கர்), மற்றும் மணிலா (33 ஏக்கர்) ஆகிய விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதைச்சான்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இதன் ஒரு பகுதியாக ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விவசாயி சத்தியராஜ் விவசாய நிலத்தில் உழுதுள்ள உளுந்து வம்பன் ரகம் விதைப் பண்ணையை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் பிற ரக கலப்பு இல்லாமலும், சுத்தமாகவும், களைவிதை ஏதுமின்றி இருக்க வேண்டும் என அறிவுறித்தினார்.

மேலும் அதே கிராமத்தில் அமைக்கப்பட்ட மணிலா, தரணி, விதைப்பண்ணை யில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகளிடம் அதிக அளவில் உளுந்து விதைப் பண்ணைகளை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் மாவட்ட மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்பாலா, வேளாண்மை துணை இயக்குநர்ஏழுமலை (மத்திய திட்டம்), விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு விதைச்சான்று உதவி இயக்குநர் குணசேகரன், விதைச்சான்று அலு வலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சுந்தரமூர்த்தி, உதவி விதை அலுவலர்கள் வடிவேல் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News