உள்ளூர் செய்திகள்

சிக்கன் பக்கோடாவில் புழு இருப்பதாக கூறி மிரட்டல்

Published On 2022-09-16 15:27 IST   |   Update On 2022-09-16 15:27:00 IST
  • ஓட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு அடாவடி
  • 3 வாலிபர்களை பிடிக்க தீவிரம்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே அசனமாபேட்டை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 52). இவர் அசனமா பேட்டை கூட் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று மாலை 3 வாலிபர்கள் ஓட்டலுக்கு சென்று சிக்கன் பகோடா வாங்கிவிட்டு சென்றனர். மீண்டும் வந்த 3 வாலிபர்களும் கடை உரிமையாளர் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் கொடுக்கவில்லை என்றால், பகோடாவில் புழு இருந்ததாக கடைக்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டி, கடையில் இருந்த சிக்கன் வறுவலை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் பேஸ்புக், வாட்ஸ் அப்பிலும் தகவல் பரப்பி கடையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டியள்ளனர்.

இது சம்பந்தமாக ஓட்டல் உரிமையாளர் சிவகுமார் மோரணம் போலீசில் புகார் செய்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News