உள்ளூர் செய்திகள்
போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
போளூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- வருகிற 11-ந்தேதி சென்னை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்
போளூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போளூர் ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதிகள் தமிழக முதலமைச்சர் கூறியபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்சம் ஓய்வூதியம் 9, ஆயிரம் வழங்க வேண்டும்.
பணிக்கொடையாக ஓய்வு பெரும் சத்துணவு அமைப்பாளருக்கு 5, லட்சமும் சமையலர் மற்றும் உதவியாளருக்கு 3, லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வரும் 11.4.2023 அன்று சென்னை நோக்கி பேரணி செல்வதாக தெரிவித்தனர்.