உள்ளூர் செய்திகள்

மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா

Published On 2022-08-09 08:43 GMT   |   Update On 2022-08-09 08:43 GMT
  • மின்சார சட்ட சீர்திருத்தத்தை கைவிடக்கோரி நடந்தது
  • அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக வளாகம் எதிரில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபடும் மின்சார சட்ட சீர்திருத்தம் 2022-ஐ கைவிட கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

மின்சார வாரிய சட்டத்திருத்தம் மசோதா நிறைவேறி தனியார் மயமாக்கல் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு வழங்க கூடிய மின்சாரம் விசை தறி நெசவாளர்கள் பொதுமக்களுக்கு வழங்க கூடிய 100 யூனிட் மின்சாரம் அடியோடு ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுவார்கள் என்று இந்த தர்ணா பேராட்டத்தில் எடுத்துரைக்கபட்டது.

மேலும் மின்சார வாரிய சட்ட சீர்திருத்தம் 2022-ஐ மத்திய அரசு கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றபட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் மின்சார வாரிய தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். இதில் சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மின் கோட்டம் கிழக்கு பகுதிகளில் உள்ள கீழ்பென்னாத்தூர் வடக்கு மற்றும்தெற்கு, சோமாசிபாடி, மேக்களூர் துணை மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்கத்தினர்கள் ஒன்றிணைந்து, கீழ்பென்னாத்தூர் துணை மின்நிலையம் எதிரில் பணிபுறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைத்து மின்துறை பொறியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News