செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அறிவுரை வழங்கிய போது எடுத்த படம்.
செய்யாறில் வாகன ஓட்டிகளை நிறுத்தி டி.எஸ்.பி. அறிவுரை
- விதிமுைறகளை கடைபிடிக்க வலியுறுத்தல்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை
செய்யாறு:
செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்குமார், அரசு உள்படபோலீசார் நேற்று ஆற்காடு சாலை அண்ணா சிலை அருகே, மற்றும் ஆரணி கூட்ரோட்டில் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 18 வயதுக்கு கீழ் வண்டி ஓட்டும் மாணவ மாணவிகள், குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், போன்ற போக்குவரத்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளான அனைவரையும் நிறுத்தி அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்திற்குரிய உரிய ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.