பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர்
- போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வெம்பாக்கம் அருகே உள்ள பைரவபுரம் கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறுமியுடன் பேசி பழகி வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மாமண்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அங்கிருந்து அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனையில் பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து மாணவி செய்யாறு மகளிர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.