உள்ளூர் செய்திகள்

ஆரணி ஆஸ்பத்திரியில் குவிந்த இறந்த குழந்தையின் உறவினர்கள்.

பாம்பு கடித்து குழந்தை சாவு

Published On 2022-07-24 09:12 GMT   |   Update On 2022-07-24 09:12 GMT
  • 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டு
  • ஆடி கிருத்திகைக்கு கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் பிரியா தம்பதியினருக்கு திவாகர் (6) உதய அரசு (3) ஆகிய 2மகன்கள் உள்ளனர்.

நேற்று ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு வீட்டின் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதில் 3 வயது குழந்தை உதயஅரசை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த பின்னர் திடிரென உதயஅரசுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் உடனடியாக களம்பூர் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்கு செல்ல சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதாமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது.

ஆரணி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வராத காரணத்தினால் 3வயது குழந்தை இறந்து விட்டதாக குற்றசாட்டினார்கள்.

பின்னர் தங்களின் குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி குழந்தை உடலை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News