உள்ளூர் செய்திகள்
டிராக்டர் மீது பைக் மோதி மெக்கானிக் பலி
- தங்கை வீட்டிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி கேயன் (வயது 39). பைக் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மாலை தனது தந்தையை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். மணிப்புரம் கிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் அவரை விட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-காஞ்சீபுரம் நெடுஞ் சாலையில், மேல்மா கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் மீது மோட்டார்சைக் கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சுசீலா அளித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.