உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய காட்சி.

ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

Published On 2023-04-12 14:17 IST   |   Update On 2023-04-12 14:27:00 IST
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளை
  • கொள்ளைக்கு திட்டமிட்டது எப்படி என்பது குறித்து விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் உடைத்து அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அப்ரிடி (வயது 36), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிராஜ்கான் (50) ஆகிய 2 பேர் நேற்று கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கலசப்பாக்கம் போலீசார் அந்த 2 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி பெயரில் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருடப்பட்ட பணம் குறித்து கொள்ளைக்கு திட்டமிட்டது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News