உள்ளூர் செய்திகள்

அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-01-19 09:19 GMT   |   Update On 2023-01-19 09:19 GMT
  • நவகிரக, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.

பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவனடியார்கள் கைலாய மேளங்கள் முழங்க கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்தீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News