பஸ் மீது பைக் மோதி ஏ.சி. மெக்கானிக் பலி
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். டெய்லராக உள் ளார். இவரது மகன் சதீஷ் (வயது 23), ஏ.சி மெக்கானிக்காக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொட்டாவூரிலிருந்து கீழ்பென்னாத்தூருக்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் கீழ்பென்னாத்தூர் திண்டிவனம் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றது.
இந்த நிலையில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த சதீசை உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.