உள்ளூர் செய்திகள்
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை
- ஜெயிலில் அடைப்பு
ஆரணி:
ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஆரணி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்யும் ஜெகன் (வயது 21) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வார்.
கடந்த டிசம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி ஜெகன் மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்ற போது அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.