உள்ளூர் செய்திகள்

தகுதி உள்ளவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்

Published On 2023-02-07 09:33 GMT   |   Update On 2023-02-07 09:33 GMT
  • உதவி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
  • பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்

ஆரணி:

ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பிரேம்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார்.

இந்த கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மேம்பாடு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு பலபேருக்கு இலவச வீட்டுமனை வரவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளன. இதனையடுத்து ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மட்டதாரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியதாவது:-

மட்டதாரி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாகவும் ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

தகுதி உள்ள நபர்களை வருவாய் துறையினர் விசாரணை செய்து மீண்டும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News