உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன்
- விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணா நுழைவாயில் அருகில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் சரவணன், கிரி, திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.