ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கிய காட்சி.
ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.5 கோடி கடன் விநியோகம்
- அதிகாரி தகவல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்திற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் கடன்களுக்கான காசோலைகளை புது ப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்த ரபாண்டியன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏழுமலை, தண்டபாணி, ஜூலியானமேரி, பவுலியானமேரி, ஆதிமூலம், வினோத்குமார், எழிலரசன், புதுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.