கேசவபுரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட புகைப்பட பழங்கால தொகுப்பு மற்றும் நடுகல்.
13-ம் நூற்றாண்டின் பழங்கால புகைப்பட தொகுப்பு கண்டெடுப்பு
- இன்றைய ஒரு குடும்ப படம் போலவே செதுக்கப்பட்டுள்ளது
- சிற்பத்தொகுப்பு முக்கியமான வரலாற்றுச்சான்றாகும்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே படவேடு கேசவபுரம் பகுதியில் கமண்டல நதிக்கரையில் அரசு நிதி உதவி பெறும் நடு நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளிக்கு அருகே காளியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை கீழ் உள்ள சிற்ப கல்வெட்டை நேற்று ஆரணியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன், படைவீடு சம்புவராயர் அறக்கட்டளை ஆய்வு மைய முனைவர் அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் கருவறையில் ஒரு சிற்பத்தொகுப்பும், அதன் எதிரே ஒரு நடுகல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அமுல்ராஜ் கூறுகையில்:- கேசவபுரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த சிற்பத்தொகுப்பு மிகவும் முக்கியமான வரலாற்றுச்சான்றாகும். இச்சிற்பம் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வென்று மண்கொண்டான் என்ற ஏகாம்பரநாத சம்புவ ராயரின் பள்ளிப்படை கோவிலாகும். சம்புவராய மன்னர்களில் தனியரசை கி.பி. 1322-ல் அமைத்தவர் வென்று மண் கொண்டான் சம்புவராயர் ஆவார். என்றார்.
வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் கூறியதாவது:-
இந்த சிற்பங்கள் வென்று மண்கொண்டானின் பள்ளிப்படை கோவில் சிற்பங்க ளாகும். இச்சிற்பத்தொகுப் பில் மன்னனும் அவரது தேவி யர்களும் வரிசையாக அமர்ந் துள்ளனர்.இது இன்றைய ஒரு குடும்ப படம் போலவே செதுக்கப்பட்டுள்ளது என் பது ஆச்சரியத்தைத் தருகிறது. சுமார் 2 அடி உயரம், 3 அறைஅகலம் கொண்ட கற்பலகை யில் ஒரு அழகிய திருவாசி அலங்கரிக்க, அதன்கீழ் வென்று மண்கொண்டான் கம்பீரமாக சடைமுடித்த கொண்டையுடனும் முகத் தில் அழகான மீசையுடனு மாக அமர்ந்துள்ளார்.
அவருக்குப் பக்கத்தில் வலப்புறம் இருவரும், இடப்புறம் மூவரு மாக ஐந்து மகளிர் வணங்கிய நிலையில் உள்ளனர். இவர் கள் பட்டத்து ராணியும், துணைவியருமாக இருக்கக்கூ டும். இவர்களுக்கு மேற்புற மாக சாமரம் வீசியபடி ஒரு பணிப்பெண்ணும் அரசனுக் குரிய வெண்கொற்றக் குடை யும் உள்ளன. மேலிரு விளிம் புகளில் வாள் மற்றும் உலகின் கண் மறையாத சூரியனும் இடம்பெற்றுள்ளது.
மூலவர் அறைக்கு எதிரே, இச்சிற்பத்திற்கு எதிர் திசையில் மூவர் நிற்கும் நடுகல் சிற்பம் ஒன்றுள்ளது. இது மன் னரை அரசியர்கள் வணங்கு வது போல உள்ளது. இப்பள் ளிப்படை சிற்பத்தின் பின் னால், சுதையினால் காளிதே வியின் உருவத்தை அமைத்து, காளியம்மன் கோவில் என தற்போது அழைத்து வருகின்றனர். அக்காலத்தில் மன்னர் வென்று மண்கொண்ட சம் புவராயர் எரியூட்டப்பட்ட இதே இடத்தில்தான் இந்த பள்ளிப்படை கோவிலானது அமைக்கப்பட்டது. இக்கோ வில் காலப்போக்கில் சிதைந்து அழிந்தது.
இக்கோவிலின் கற்களைக் கொண்டே அருகில் உள்ள அலியாபாத் அணைக்கட்டை 1869-ல் ஆங் கிலேயர்கள் கட்டிமுடித்துள் ளனர் எனக் கருதமுடிகிறது. சோழ அரசர்களின் நம்பிக் கைக்குரிய சிற்றரசர்களாக இருந்த சம்புவராய மன்னர்க ளின் தலைநகரமாக படைந கரமாக இடைக்காலத்தில் சிறப்புற்று இருந்த படைவீட் டில் சம்புவராய மன்னரின் பள்ளிப்படைக் கோவில் எழுப்பப்பட்டிருந்தது என்ப தற்கான முக்கிய வரலாற்று சான்றுகள் தற்போது கண்ட றியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.