உள்ளூர் செய்திகள்

கோவில் சொத்துகளுக்கு அடையாள கல் வைத்த காட்சி.

அய்யம்பாளையம் கோவில் சொத்துகளுக்கு அடையாள கல்

Published On 2022-08-04 14:34 IST   |   Update On 2022-08-04 14:34:00 IST
  • சர்வே எண்களில் 9.51 சதுர பரப்பு மீட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது

கண்ணமங்கலம்:

படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ரோவர் கருவி மூலம் நடைபெற்றது.

இதையடுத்து அளவீடு செய்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அடையாளம் படுத்தும் வகையில் எழுத்துக்கள் உள்ள கல்நடும் பணி நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி ஆகியோர் ஆலோசனைப்படி, ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம் முன்னிலையில், துறை செயற் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் கல் நடப்பட்டன.

அப்போது கோவில் மேலாளர் மகாதேவன், ஒப்பந்ததாரர் உடனிருந்தனர். இதன் மூலம் பல்வேறு சர்வே எண்களில் 9.51 சதுர பரப்பு மீட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News