உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
அவிநாசி அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
- குழந்தைவேல் குரும்பபாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
- அரசு பேருந்து குழந்தைவேலின் வாகனத்தின் மீது மோதியது.
அவிநாசி :
அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் வெங்கடேஷ்வரா காா்டன் பகுதியை சோ்ந்தவா் குழந்தைவேல் (வயது 27). இவா் குரும்பபாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா்.அவிநாசி காமராஜா் நகா் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து குழந்தைவேலின் வாகனத்தின் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.