உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2023-04-28 05:32 GMT   |   Update On 2023-04-28 05:32 GMT
  • எஸ்.சுல்தான் என்பவா் கடந்த பிப்ரவரி 18 -ந் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
  • 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

திருப்பூர் :

திருப்பூா் அருகே வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூா் முருகம்பாளையம் முதல் தெருவில் உள்ள ராம் மருத்துவமனை அருகில் எஸ்.சுல்தான் என்பவா் கடந்த பிப்ரவரி 18 -ந் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் சுல்தானை தள்ளிவிட்டு அவா் வைத்திருந்த பணத்தைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அதில் மதுரை மேலூா் கீழவளவு ஆசாரிவால் வீதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நபா் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமாரிடம் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான ஆணையை 15 வேலம்பாளையம் போலீசார் வழங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News