உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-03-27 07:56 GMT   |   Update On 2023-03-27 07:56 GMT
  • 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
  • 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர்.

திருப்பூர் :

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டட க்கலை, வாழ்வியல்திறன் படிப்புகளை கற்றுத்தர 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூ தியத்தில் நியமிக்கப்ப ட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரி கின்றனர். 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருகிறோம்.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வர் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 12 ஆண்டுகளை கடந்து பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.பெரும்பாலானோர் 50 வயதை கடந்து விட்டார்கள். பணிநிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். தி.மு.க., தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News