உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊர்ப்புற நூலகம் சீரமைக்கப்படுமா? - வாசகர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-12-13 09:53 IST   |   Update On 2022-12-13 09:53:00 IST
  • பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட கட்டிடம் நீர்க்கசிவு ஏற்பட்டு வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
  • நூலகத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

உடுமலை : 

உடுமலை குரல் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டினத்தில் ஊர்புற நூலகம் செயல் பட்டு வருகிறது.இந்த நூலகத்தின் நூலக வாசகர் வட்ட ஆலோசனைக்கூட்டம் தலைவர் (பணி நிறைவு) தலைமையாசிரியர் சிவராஜ் தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் தங்கவேலு, லட்சுமிபதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மலையாண்டிபட்டினம்ஊர் புற நூலகத்திற்கு நன்கொடையாளர்கள் மூலம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட கட்டிடம் நீர்க்கசிவு ஏற்பட்டு வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நீர்க்கசிவு அதிகமாக ஏற்பட்டு சுவற்றில் வடிந்து வாசகர்கள் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தகங்களும் வீணாகிறது. கிராமப்புற நூலகமான இதனை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்திற்கு 82 புரவலர்கள் உள்ளனர். தினசரி 30க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூல்கள் எடுக்கவும் வாசிக்கவும் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நன்கொடையாளர்கள் மூலமாகவே பராமரிக்கப்பட்ட இக்கட்டிடத்தை நூலக ஆணை குழு மூலம் சீரமைத்து தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த நூலகத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே காம்பவுண்ட் சுவர் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News