உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் சூடுபிடிக்கும் பஞ்சாப் ஸ்வெட்டர்கள் விற்பனை

Published On 2022-11-28 05:00 GMT   |   Update On 2022-11-28 05:00 GMT
  • கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.
  • 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

திருப்பூர் :

கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கமாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படும்.அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல தரப்பினரும் பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றனர்.

இதில் பொதுவான விஷயமாக உடலில் குளிர் பாதிக்காமலும் வெப்பத்தை தக்க வைக்கும் விதமாகவும், உல்லன் ஸ்வெட்டர்கள், குரங்கு குல்லா, மப்ளர், ஜெர்கின், காதுகளை அடைக்கும் ஹியர் கேப் என பல விதமான உடை வகைகளை பயன்படுத்துகின்றனர்.அவ்வகையில் இவற்றின் விற்பனை தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் பகுதியில் இருந்து இவற்றை கொள்முதல் செய்து வந்து வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

Tags:    

Similar News