உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம்

Published On 2022-12-22 06:31 GMT   |   Update On 2022-12-22 06:31 GMT
  • எமிஸ் தளத்தில் மாணவரது பெயர், தமிழ், ஆங்கில மொழிகளில் சரிபார்த்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டது.
  • அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான பணி முழுமை பெற்றுள்ளது என்றனர்.

திருப்பூர் : 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் எமிஸ் எனும் கல்வி -மேலாண்மை தொகுப்பு இணையதளத்தில் பதியப்படும் தகவல்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் பெயர், தேதி உள்ளிட்ட விபரம், பதிவு செய்யப்பட்டது.

பிளஸ் 1 மாணவர்களின் பெயர் பட்டியல் விபரம் சரிபார்த்து கூடுதல் தகவல்களை பதிவேற்ற தலைமையாசிரியர்களுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூர் பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- 2022-23ம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு எழுதும், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.எமிஸ் தளத்தில் மாணவரது பெயர், தமிழ், ஆங்கில மொழிகளில் சரிபார்த்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதுதவிர மாணவர்களின் மொழிப்பாட விலக்கு, பயிற்று மொழி மாற்றம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிரந்தர பதிவெண் உள்ளிட்ட கூடுதல் விபரங்களும் பதிவு செய்யப்பட்டது.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இதற்கான பணி முழுமை பெற்றுள்ளது என்றனர்.

Tags:    

Similar News