உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2023-06-17 10:14 GMT   |   Update On 2023-06-17 10:14 GMT
  • வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
  • று அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் அலுவலக பின்புறத்தில் பாம்புகள் ஊர்ந்து சென்றது .

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் பொக்லைன் மூலம் புதர்கள் அகற்றப்பட்டது.

Tags:    

Similar News