உள்ளூர் செய்திகள்

கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய காட்சி.

தி பிரண்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி - மாணவர்கள் அசத்தல்

Published On 2023-03-01 10:55 GMT   |   Update On 2023-03-01 10:55 GMT
  • தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.
  • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் தி பிரண்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஈஸ்வரன் , தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் டாக்டர் கே.சிவசாமி மற்றும் இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அசத்தினர். கண்காட்சியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் காட்சிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பரிசளிப்பு விழாவில் பள்ளியின் இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News