உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை
- வருவாய்த் துறையினருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.
- தாசில்தார் தலைமையில், போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருப்பூர் :
அவிநாசியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்ப ட்டிருந்த வருவாய் துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
அவிநாசி, மேற்கு ரத வீதியில், க.ச.எண் 85டி/15ல், சர்க்கார் புறம்போக்கு நிலம், வருவாய்த் துறையினருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனை தொடர்ந்து, தாசில்தார் சுந்தரம் தலைமையில், அவிநாசி போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இதில், துணை தாசில்தார் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் சாந்தி, ஆர்.ஐ., அனிதா, வி.ஏ.ஓ., காமாட்சி, மின் வாரிய உதவி பொறியாளர் சிவசண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர். வருவாய் துறைக்கு சொந்தமான, 15 சென்ட் நிலம் வருவாய் துறையின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டது. தற்போதைய இதன் சந்தை மதிப்பு, 10 கோடி என தெரிவித்தனர்.