உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-25 11:04 GMT   |   Update On 2022-08-25 11:04 GMT
  • 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

திருப்பூர் :

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு அலுவலர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மகுடேஸ்வரன், சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். மாநில தலைவர் ரமேஷ், போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

முன்னாள் மாநில தலைவர் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். வளர்ச்சித்துறை மீது பணிகளை திணிக்க கூடாது, விடுமுறை நாள், காலம் கடந்த ஆய்வுகள், இரவுநேர ஆய்வுகள், வாட்ஸ் ஆப் ஆய்வுகள், வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுகளை முழுமையாக கைவிட வேண்டும்.மாவட்டத்தில், 25 ஊராட்சிகளை கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். காலியாக உள்ள ஒன்றிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதன்பின் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News