உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மரப்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலுக்கு முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் - வேளாண் விஞ்ஞானி விளக்கம்

Published On 2023-04-10 04:59 GMT   |   Update On 2023-04-10 04:59 GMT
  • வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.
  • மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.

உடுமலை :

மரப்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலுக்கு, முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குறித்து வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானி ஜான் பிரசாந்த் ஜேக்கப் கூறியதாவது :- பூச்சி தாக்குதலுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம்.அதன்படி மரப்பயிர்களை நடவு செய்யும் வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.தண்ணீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். மண்ணை முழுமையாக பரிசோதித்த பின் மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.மரப்பயிர்களை நடவு செய்யும்போது இயற்கை உரங்களையிட்டு நட வேண்டும். களைத்தாவரங்களை தொடர்ந்து நீக்கி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றுதல், ஒளி பொறிகளை வைத்து பூச்சிகளை பிடித்தல், சரியான ஊடு பயிரிடுதல் ஆகியவற்றை பின்பற்றலாம்.ஒரே இன மரப்பயிர்களை அருகருகே நடுவதால் பூச்சி விரைவாக பரவி விடும். ஆகவே பல்வேறு இனப்பயிர்களை நட வேண்டும். வேளாண் நிலத்தில் அகற்றப்படும் களைச்செடிகள் எரிக்கப்படும்போது பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News