உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் மற்றும் நந்தி.

வெள்ளகோவில் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

Published On 2023-05-18 13:08 IST   |   Update On 2023-05-18 13:08:00 IST
  • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
  • சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சோழீஸ்வரர்கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News