உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு
- தனியார் கல்லூரி அருகே ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே திருப்பூர் -தாராபுரம் சாலையில் குப்பிச்சிபாளையத்தை அடுத்த தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அவர் மீது எந்த வாகனம் மோதியது என்பது தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.