உள்ளூர் செய்திகள்

விவி.பேட் எந்திரம்.

திருப்பூர் மாவட்டத்துக்கு விவி.பேட் எந்திர பிரிண்டிங் ரோல்கள் வந்து சேர்ந்தது

Published On 2023-11-24 14:14 IST   |   Update On 2023-11-24 14:14:00 IST
  • திருப்பூர் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • மொத்தம் 4,500 பிரிண்டிங் ரோல்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் லாரிகள் மூலம் வந்தது.

 திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

விவிபேட் எந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய பிரிண்டிங் ரோல்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது. மொத்தம் 4,500 பிரிண்டிங் ரோல்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் லாரிகள் மூலம் வந்தது.

அவற்றை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கும் ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

Tags:    

Similar News