உள்ளூர் செய்திகள்

சேமநல நிதி கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்ற காட்சி.

திருப்பூர் கோர்ட்டில் சேமநல நிதி கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல்

Published On 2023-08-25 15:20 IST   |   Update On 2023-08-25 15:20:00 IST
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
  • தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.

திருப்பூர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .அதற்காக 18 பேர் போட்டிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் எம்.பழனிசாமி தேர்தல் அதிகாரியாகவும் வக்கீல் பாலகுமார் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வழக்கறிஞர் அணி செயலாளர் பத்மநாபன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த தேர்தலை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ரகுபதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த தேர்தல் இன்று மாலை வரை நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் நபர்கள் சேம நல நிதி கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News