உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

Published On 2022-07-25 12:51 GMT   |   Update On 2022-07-25 12:51 GMT
  • நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
  • பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

மடத்துக்குளம்:

உடுமலைப்பேட்டை - கொழுமம் சாலையில் உள்ளது எஸ்.பி.புரம்.இங்கு இருந்த பயணிகள் நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடை அமைக்கும்படி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் புதியதாக பயணிகள் கூடை அமைக்கப்படவில்லை. அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

அதனால் எஸ்.வி.புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடை அமைக்க வேண்டும். அங்கிருந்து பழனிசாலைக்குச் சென்று இணையும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 பேரிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News