உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஒருங்கிணைப்பு குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும் - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

Published On 2023-10-08 11:11 GMT   |   Update On 2023-10-08 11:12 GMT
  • பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவிநாசி:

அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

Similar News