உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கொப்பரை கொள்முதலில் புதிதாக விவசாயிகள் பதிவு செய்யலாம்

Published On 2023-11-02 12:18 IST   |   Update On 2023-11-02 12:18:00 IST
  • கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
  • அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உடுமலை:

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையடிபாளையத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117. 50-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் இலக்கு அளவான 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நிறைவு பெற்றவுடன் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தநிலையில், அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளதால் பதிவு செய்யப்படாத விவசாயிகளிடம் இருந்தும் அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், நேற்று கலெக்டர் அறிவுறுத்தல் படி தற்போது நடைபெற்று வரும் கொப்பரை கொள்முதலில் பதிவு செய்யாத விவசாயிகளும் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூடமேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News