உள்ளூர் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்ற காட்சி.

வெள்ளகோவில் அருகே இந்து சமய அறநிலையத்துைற சார்பில் ஈஸ்வரர் கோவிலில் நில அளவீடு செய்யும் பணி

Published On 2023-11-01 17:04 IST   |   Update On 2023-11-01 17:04:00 IST
  • தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளகோவில்:

தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு, கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரத்துரை, வட்டாட்சியர் ஆலய நிலங்கள் ரவீந்திரன் மற்றும் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் மற்றும் சர்வேயர்கள் இணைந்து தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனுடைய தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News