உள்ளூர் செய்திகள்

கற்றல் திறன் திறனறி தேர்வு - நாளை நடக்கிறது

Published On 2023-11-02 07:34 GMT   |   Update On 2023-11-02 07:35 GMT
  • மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: 

3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக, எஸ்இஏஎஸ் எனும் திறனறிவு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த, 2022ல் தேர்வு நடந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023) தேர்வு 3, 5, 8மற்றும்9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News