உள்ளூர் செய்திகள்

மழையால் சேதமான சாலையை படத்தில் காணலாம். 

பல்லடத்தில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

Published On 2022-11-14 05:15 GMT   |   Update On 2022-11-14 05:15 GMT
  • இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

பல்லடம்:

பல்லடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் பல்லடத்தில் இருந்து , திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், அவினாசி என, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரோடுகள் அனைத்தும் மழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. பலர் இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: -

பல்லடத்தில் ரோடுகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், தொடர் மழை காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழை குறைந்துள்ளது. விரைவில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அனைத்து ரோடுகளும்சீரமைக்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News