கோப்புபடம்.
பல்லடத்தில் நடைபாதை கடைகளை அகற்ற மார்கெட் வியாபாரிகள் கோரிக்கை
- மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
- இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகரின் மையப் பகுதியான என். ஜி. ஆர்., சாலையில் ஏராளமான வணிக வளாக கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளது. அந்த கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழை,எளியவர்கள் என். ஜி. ஆர். சாலையில் இருபுறமும் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நடைபாதை கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை நகராட்சி நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியதை அடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று மார்க்கெட் வியாபாரிகள் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் மற்றும் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தனர். நடைபாதை கடைகளை அகற்றுவதாகவும், அதே நேரம் மார்க்கெட்டினுள் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை போடக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.