உள்ளூர் செய்திகள்

குளத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

காங்கயம் நகராட்சியில் பதுமன்குளம் புனரமைக்கும் பணி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

Published On 2023-01-19 07:14 GMT   |   Update On 2023-01-19 07:15 GMT
  • ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
  • கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது.

காங்கயம்

காங்கயம் நகராட்சியில் பதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4கோடியில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கிரீட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேலிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News