உள்ளூர் செய்திகள்

நிகழச்சியில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட காட்சி.

சாமளாபுரம் பேரூராட்சியில் 142 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-01-26 10:52 GMT   |   Update On 2023-01-26 10:52 GMT
  • ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் 142 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் , சாமளாபுரம் பேரூராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் 142 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் , சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் நில வருவாய் அதிகாரி, மற்றும் தி.மு.க. கட்சியின் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.அன்பரசு,திமுக கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழக செயலாளர் பி.வேலுச்சாமி,சாமளாபுரம் பேரூர்கழக துணைச்செயலாளர்கள் எஸ்.பி.தியாகராஜன்,வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் தங்கராசு,ரங்கசாமி ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் தயாளன் ,வினோஜ்குமார், கிருஷ்ணவேணி, மகாலட்சுமி பாலச்சந்தர், மைதிலிபிரபு, துளசிமணிஆறுமுகம், ஒன்றிய பிதிதிநிதிகள் எழில்நிதி, சண்முகம், வார்டு செயலாளர் பழனிச்சாமி ,இச்சிப்பட்டி சிவக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News