உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த அழகர்சாமி. 

உடுமலை அருகே பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த வாலிபர் - போலீசார் விசாரணை

Published On 2022-12-29 06:46 GMT   |   Update On 2022-12-29 06:46 GMT
  • சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டியவர் மறுநாள் இரவு வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
  • சம்பவம் குறித்து அழகர்சாமியின் அண்ணன் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

உடுமலை:

திண்டுக்கல் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் அழகர்சாமி (வயது 29). இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடுமலை சாஸ்தா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டியவர் மறுநாள் இரவு வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டிப்பார்த்தும் திறக்காததால் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழகர்சாமி கட்டிலில் எறும்புகள் மொய்த்த நிலையில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார்.உடனடியாக அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அழகர்சாமியின் அண்ணன் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படும் நிலையில் குடிபோதையில் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? உடல் நலக்குறைவால் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News