உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் மேயர், சப்-கலெக்டர்.

தேர்தல் அறிக்கையில் 85 சதவீதத்தை தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது - மேயர் பேச்சு

Published On 2023-09-10 12:42 IST   |   Update On 2023-09-10 12:42:00 IST
  • முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் பெண்கள் பயனடைய உள்ளனர்
  • திருப்பூர் மாநகராட்சியில் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்

திருப்பூர் : 

திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட நெருப்பெரிச்சல் கிராமம் கொங்கு கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் வரவேற்றார். இதில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வாழ்த்தி பேசுகையில் "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 85 சதவீதத்தை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளது. வரும் 15-ந்தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் பெண்கள் பயனடைய உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் 120 பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பசியாறி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்" என்றார்.

முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்து 58 ஆயிரத்து 049 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை சப்-கலெக்டர், மேயர் ஆகியோர் வழங்கினார்கள். பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 84 மனுக்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பல்வேறு துறை, மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை மேயர், சப்-கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் பயிற்சி கலெக்டர் கிருத்திகா, நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் ஜோதி, சமூக ஆர்வலர் ஈ.பி. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News