உள்ளூர் செய்திகள்

மான் இறைச்சியை பதுக்கி வைத்தவர் கைது

Published On 2022-12-11 10:48 IST   |   Update On 2022-12-11 10:48:00 IST
  • செந்தில்ராஜ் என்பவர் அடிபட்ட மானை வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக பதுக்கி உள்ளார்.
  • வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உடுமலை  :

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை ,புலி, சிறுத்தை ,மான், காட்டெருமை ,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவை உணவு தேவையை நிறைவு செய்த பின்பு தாகம் தீர்ப்பதற்காக உடுமலை திருமூர்த்தி மலை சாலையை கடந்து திருமூர்த்தி அணைக்கு வருவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம் மான் ஒன்று உடுமலை- திருமூர்த்தி மலை சாலையை கடக்க முயற்சித்து உள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு விட்டதாக தெரிகிறது. அந்த வழியாக சென்ற திருமூர்த்தி நகரை சேர்ந்த செந்தில்ராஜ் என்பவர் அடிபட்ட மானை வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக பதுக்கி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.அப்போது செந்தில்ராஜ் மான் கறியை பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

Similar News