உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அருள்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-08-06 11:50 IST   |   Update On 2023-08-06 11:50:00 IST
  • கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
  • உலக வங்கி குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருள்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.  திருப்பூர், பொங்கலூர், அவினாசி, குண்டடம், உடுமலை ஆகிய 5 வட்டாரங்களில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாய பண்டக பள்ளி, உற்பத்தியாளர் குழு, தொழில் குழு, உற்பத்தியாளர் நிறுவனம், மதி சிறகுகள் அமைப்பு ஆகியவை குறித்து உலக வங்கியை சேர்ந்த குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள் அருள்ஜோதி அரசன், கணேஷ்குமார், ராஜேஸ்குமார், திருப்பூர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News