உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தொழில் வளர்ச்சிக்காக பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-08-16 06:26 GMT   |   Update On 2022-08-16 06:26 GMT
  • டீமா உறுப்பினர் நிறுவனங்களின் அலுவலர் தேவையை, 'டீசா' உறுப்பினர்களைக் கொண்டு பூர்த்தி செய்தல்.
  • பின்னலாடை தொழில் துறை வளர்ச்சிக்காக, இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) மற்றும் திருப்பூர் டேலன்ட் எக்ஸ்போர்ட் ஸ்டாப் அசோசியேஷன் (டீசா) சங்கங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி டீசா அரங்கில் நடந்தது.டீமா தலைவர் முத்துரத்தினம், டீசா தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்த ஷரத்துக்களானது பின்னலாடை தொழில் துறை வளர்ச்சிக்காக, இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.தொழில்முனைவோர், தொழிலாளர், அலுவலர்கள் என3 தரப்பினரையும் இணைத்து, பின்னலாடை தொழில் துறையை மேம்படுத்துதல், 'டீமா' உறுப்பினர் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரிவோரை டீசா உறுப்பினராக இணைத்தல், டீமா உறுப்பினர் நிறுவனங்களின் அலுவலர் தேவையை, 'டீசா' உறுப்பினர்களைக் கொண்டு பூர்த்தி செய்தல்.

அலுவலர்களின் பணித்திறன், நிர்வாக திறன், தொழில் திறன்களை மேம்படுத்த இரு சங்கங்களும் இணைந்து பயிற்சி அளித்தல், டீமா உறுப்பினர் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரியும் டீசா உறுப்பினர்களின் பணியிடம் மாற்றம், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்துவைத்தல், அலுவலர்களின் பொறுப்புணர்வு மற்றும் அவர்களின் செயல்திறன்களை மேம்படுத்த குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்தல்.

பின்னலாடை நிறுவன அலுவலர்களின் மனச்சோர்வை போக்க வாரம் ஒருநாள், விளையாட்டு போட்டி நடத்துதல், சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு டீசா மூலம் பாராட்டு சான்று வழங்குதல், அலுவலர்களின் சம்பளம், போனஸ் குறித்த சிக்கல்களுக்கு டீமா மற்றும் டீசா சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுதல், பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டால் இரு சங்கங்களும் கரம்கோர்த்து செயல்பட்டு தொழிலை மீட்டல்உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

Similar News