உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காட்டுப்பாளையம் புதிய மின் பகிர்மானம் தொடக்கம் - மின் கணக்கீடு செய்வதில் மாற்றம்

Published On 2023-10-28 15:52 IST   |   Update On 2023-10-28 15:52:00 IST
  • கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின்கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
  • புதிய மின்கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சு.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மின்பகிர்மான வட்டம் திருப்பூர் கோட்டம் கிராமியம் உபகோட்டம் நல்லூர் பிரிவு அலுவலகத்தை சார்ந்த முத்தணம்பாளையம் (008) பகிர்மானத்திலிருந்து சுமார் 750 மின் இணைப்புகளை பிரித்து காட்டுப்பாளையம் (010) என்ற புதிய பகிர்மானம் உருவாக்கி மின் இணைப்புகளுக்கு புதிய மின் இணைப்பு எண்கள் வழங்கப்பட்டு ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்ய அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.

எனவே காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள யாசின்பாபு நகர், பூஞ்சோலை நகர், அபிராமிநகர், அங்காளம்மன் நகர் பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர் இனி வரும் காலங்களில் ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின்கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இனி வரும் காலங்களில் மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களை பயன்படுத்துமாறும் புதிய மின்கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News